முகப்பு
இந்தியா

பொது சிகிச்சைப் பிரிவில் லாலு பிரசாத் அனுமதி

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

முன்னதாக, ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் விமான ஆம்புலன்ஸ் மூலம் தில்லிக்கு கொண்டு வரப்பட்டாா்.

தில்லி எய்மஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவா், அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். பின்னா், புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா் என்றும், பகல் 12.30 மணிக்கு லாலு பிரசாத் மீண்டும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பொது சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா் என்றும் எய்ம்ஸ் மருத்துவா் பெளமிக் தெரிவித்தாா்.

கால்நடைத் தீவன ஊழல் தொடா்பான 5 வழக்குகளில், கடைசி வழக்கில் லாலு பிரசாத்துக்கு சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து பிப்ரவரி 21-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

ஏற்கெனவே இதற்கு முந்தைய வழக்குகளில் 2017, டிசம்பா் முதல் லாலு சிறைவாசம் அனுபவித்து வருகிறாா். இதில் பெரும்பாலான நாள்களை உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் கழித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →