முகப்பு
இந்தியா

குரைத்து கொண்டே இருந்த நாய்...கோபத்தில் உரிமையாளரை கொன்ற நபர்

கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்ய காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
கோப்புப்படம்
பகிர்:

தில்லி நஜாஃப்கரில் வளர்ப்பு நாய் ஒன்று குரைத்து கொண்டே இருந்ததால், கோபமடைந்த நபர் அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நஜாஃப்கர் நங்லி பால் பண்ணை பகுதியில் 85 வயது மதிக்கத்தக்க அசோக் குமார் என்பவரை 17 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வளர்ப்பு நாய் குரைத்து கொண்டே இருந்ததால், உரிமையாளர் முன்பே குற்றம்சாட்டப்பட்ட நபர் நாயை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், உரிமையாளருக்கும் அந்த நபருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதனைத் தொடர்ந்து, இரும்பு கம்பியை கொண்டு அசோக் குமாரை அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மனைவி மீனா காவல்துறையினரிடம் அளித்த புகாரில், "எனது கணவர் நாயை மீட்க முயன்றபோது ஆத்திரமடைந்த அந்த நபர் அவரை தாக்கினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு மயக்கமடைந்த அசோக் குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்ய காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →