ஷீனா போரா , இந்திராணி முகர்ஜி 
இந்தியா

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு

ஷீனா போராவைக் கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

DIN

ஷீனா போராவைக் கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியின் மனைவியாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா  பாராவை கொலை செய்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பீட்டர் முகர்ஜிக்கும், அவருடைய முன்னாள் மனைவிக்கும் பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை, ஷீனா போரா காதலித்ததால், இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, மும்பையில் உள்ள பைகுல்லா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திராணி முகர்ஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், அவர் பிணை மனுவை எதிர்த்து சிபிஐ ’இந்திராணி முகர்ஜி தன் மகளைக் கொன்றவர், மகனைக் கொல்ல முயற்சி செய்தவர். இதை சாதாரண வழக்காகக் கருத முடியாது என்பதால் நீதிமன்றத்தின் எந்தக் கருணையையும் பெறத் தகுதியற்றவர். மேலும் , இந்திராணி  வெளியே வந்தால் சாட்சியங்களை அழித்து தலைமறைவாகக் கூடும்’ என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT