முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 182.55 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 182.55 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 25 மார்ச், 2022 at 11:40 AM
பகிர்:

நாட்டில் இதுவரை 182.55 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 12 முதல் 14 வயதுள்ள சிறார்களுக்கு இதுவரை 90 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 90,06,782 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 1,82,55,75,126 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Advertisement

வயதுவாரி விவரங்கள்

நாட்டில் தற்போது 21,530 பேர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,499 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,78,087 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,938 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.  மேலும் இந்தியாவில் ஒரேநாளில் 6,91,425 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மொத்தம் இதுவரை 78,56,44,225 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.