இந்தியா

பஞ்சாபில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு மலைப் பிரதேசத்தில் நங்கூரமிடும் ஆம் ஆத்மி

IANS


ஷிம்லா: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, வெற்றிவாகைச் சூடியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, சூட்டோடு சூடாக மலைப் பிரதேசமான இமாசலில் நங்கூரமிட திட்டமிட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம்  இமாசலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 1985 ஆம் ஆண்டு முதல் பாஜகவும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சி செய்து வந்திருப்பதே வரலாறாக உள்ளது.

அங்கு காங்கிரஸ் - பாஜக இடையே தான் கடும் மோதல் நிலவுகிறது. இதர கட்சிகள் காலத்துக்கு ஏற்ப கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.

இந்த மாநிலம் ஆம் ஆத்மிக்கு ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இமாசலில் உத்வேகத்துன் கட்சிப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், இரு பெரும் கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் மட்டுமே ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பார்கள் என்பதால் வெற்றிக் கனி அவ்வளவு எளிதில் கிட்டும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT