பொதுத்தேர்வு: ஏப்.1ல் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி உரையாடுகிறார்.
நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி உரையாடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுக்கு முன்னர் மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரிஷா பே சச்சா’(தேர்வுக்கு தயாராவோம்) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகள் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இதையடுத்து பிரதமா் நரேந்திர மோடி மாணவா்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாணவர்களுடன் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொள்கிறார்கள். தேர்வு பயம், மன அழுத்தத்தைப் போக்க நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடவிருக்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய கல்வித் துறையால் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.