இந்தியா

இந்தியப் பயணத்தின் போது வாரணாசிக்கு செல்கிறார் நேபாள பிரதமர்

நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தாபா அரசுமுறைப் பயணமாக வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி இந்திய வருகையின்போது, வாரணசிக்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தாபா அரசுமுறைப் பயணமாக வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி இந்திய வருகையின்போது, வாரணசிக்கு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அண்டை நாடான நேபாளத்துக்கு தேவையான உதவிகளை அளித்து இந்தியா நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஷர்மா ஓலி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். 

இதையடுத்து கடந்த ஆண்டு நேபாள பிரதமராக பதவியேற்ற ஷோ் பகதூா் தாபா அரசுமுறைப் பயணமாக வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியா வரவுள்ளார். 

இந்த சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தவும் வர்த்தகம், பொருளாதாரம் குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது. 

ஏப்ரல் 1 ஆம் தேதி இந்தியா வரும்  நேபாள பிரதமர் ஷோ் பகதூா் தாபா ஏப்ரல் 3 ஆம் தேதி நேபாளம் திரும்புகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT