ரிது காந்துரி 
இந்தியா

உத்தரகண்ட்டின் முதல் பெண் பேரவைத் தலைவரானார் ரிது காந்துரி

உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் தலைவராக ரிது காந்துரி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN

உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் தலைவராக ரிது காந்துரி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சியமைத்துள்ளது. இதில் கோத்வார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரிது காந்துரி முன்னாள் அமைச்சர் எஸ்எஸ் நெகியை விட 3 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். 

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரான பிசி காந்தூரியின் மகளான ரிது காந்துரி தற்போது மாநில சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இதன்மூலம் உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் பேரவைத் தலைவர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் யம்கேஷ்வர் தொகுதியில் போட்டியிட்டு ரிது காந்துரி வெற்றி பெறுவதற்கு முன்பாக நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். 

சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற ரிது காந்துரிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT