கோப்புப்படம் 
இந்தியா

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை பதவியேற்பு: பிரதமர் பங்கேற்பு

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை (திங்கள்கிழமை) இரண்டாவது முறையாகப் பதவியேற்கிறார்.

DIN


கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை (திங்கள்கிழமை) இரண்டாவது முறையாகப் பதவியேற்கிறார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழா காலை 11 மணியளவில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவுள்ளது.

பதவியேற்பு விழாவில் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள் என்பது குறித்த தகவலை பாஜக இன்னும் வெளியிடவில்லை.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் பிரமோத் சாவந்தைத் தொடர்புகொண்டது. அப்போது, "எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றி உங்களுக்கு நாளை தெரியவரும்" என்றார் அவர்.

முதல்வரைத் தவிர்த்து கோவா அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் இடம்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT