கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில்  தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் பலி

தானேவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டு இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர்.

DIN

தானே (மகாராஷ்டிரா): தானேவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டு இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர்.

இந்த சம்பவம் தானேவின் நௌபாடா பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் நடந்துள்ளதாக தானே முனிசிபல் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.

தீயணைப்பு படையினர்  தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மேலும் இரண்டு தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த இரு தொழிலாளர்களின்  சடலங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து தானே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT