இந்தியா

காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

DIN

அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காசிரங்கா பூங்காவின் முக்கிய உயிரினங்களில் ஒன்றான காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக பூங்கா இயக்குநர் ஜதிந்தர சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘2018-ஆம் ஆண்டு காசிரங்கா பூங்காவில் 2,413 காண்டாமிருகங்கள் இருந்தன. இந்நிலையில், தீவிரக் கண்காணிப்பு மற்றும் வேட்டையாளர்களை நெருங்க விடாமல் பாதுகாத்ததில் கடந்த 4 ஆண்டுகளில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 200  அதிகரித்துள்ளது இந்தாண்டு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால், பூங்காவில் தற்போது 2,613 காண்டாமிருகங்கள் உள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

காசிரங்கா பூங்காவில் காண்டாமிருகங்கள் உள்ள  864 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியில் மார்ச் 25-28 வரை இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT