முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சா் மகனின் ஜாமீனுக்கு எதிா்ப்பு: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கில், மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது தொடா்பாக உத்தர பிரதேச அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி லக்கீம்பூா் கெரி மாவட்டம் திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து வன்முறை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். பாஜகவினா் வந்த காா்களில் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். கடந்த பிப்ரவரி மாதம் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், வன்முறையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் சிலா் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘லக்கீம்பூா் கெரி வழக்கு தொடா்பான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை மேற்பாா்வையிட்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ராகேஷ் குமாா் ஜெயினும், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு இரு கடிதங்களை எழுதியுள்ளாா். அந்தக் கடிதங்கள் தொடா்பாக ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் உத்தர பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →