இந்தியா

தில்லி முதல்வர் கேஜரிவாலை நாளை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கவிருக்கிறார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். பின்னர், தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதன்பின்னர் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். 

இதையடுத்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஏப்ரல் 1) சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின்போது இரு மாநில முதல்வர்களும் தில்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்கின்றனர். 

தில்லியில் ஏப்ரல் 2-ஆம் தேதி திமுக அலுவலக திறப்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT