இந்தியா

தில்லியில் நாளைமுதல் வெயிலின் தாக்கம் குறையும்!

DIN

தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வெயிலின் தாக்கம் நாளை முதல் குறைய வாய்ப்புள்ளது. 

கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட தில்லி, பஞ்சாப், இமாசலப் பிரதேசம், ஹரியாணா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும்.

மேலும், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஒருசில பகுதிகளில் வெயில் குறைந்து கருமேகங்கள் சூழ வாய்ப்புள்ளதாகவும், ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT