இந்தியா

பாகிஸ்தானில் மருத்துவம் படிக்க வேண்டாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

DIN


புதுதில்லி: மருத்துவ உயர்கல்வி படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு, இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு கல்லூரியிலும் அல்லது கல்வி நிறுவனங்களில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) வலியுறுத்திய நிலையில், தேசிய மருத்துவ ஆணையமும் தற்போது இந்தியாவிலேயே வேலை தேடுங்கள் அல்லது உயர் கல்வியைத் தொடருங்கள் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மருத்துவக் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 

பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் எந்தவொரு இந்திய நாட்டவரும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில், இந்தியாவில் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வை எழுதவோ அல்லது வேலை தேடவோ தகுதி பெற மாட்டார்கள்.

இருப்பினும், டிசம்பர் 2018 ஆண்டிற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ பாகிஸ்தானில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதிக்கு பின் இந்தியாவில் பணி செய்ய தகுதியுடைவர்களாக கருதப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயின்ற இந்திய மாணவர்கள், அங்கு மருத்துவப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் பெற்ற பின்னர் இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்து மருத்துவம் பார்ப்பதற்கு, தணிக்கை பரிசோதனை தேர்வில் (எப்எம்ஜிஇ)  தகுதி பெற வேண்டும்.

“இந்த பொது அறிவிப்பு தொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்தியாவின் இந்த வெளிப்படையான பாரபட்சமான மற்றும் விவரிக்க முடியாத நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது" என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT