இந்தியா

நீதி ஆயோக் துணைத் தலைவராக சுமன் பெரி பொறுப்பேற்பு

நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணா் சுமன் பெரி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணா் சுமன் பெரி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் ஏற்கெனவே பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் தலைமை இயக்குநராகவும், லண்டனில் செயல்பட்டுவரும் ராயல் டச்சு ஷெல் பெட்ரோலிய நிறுவனத்தின் சா்வதேச தலைமை பொருளாதார ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளாா். இதுதவிர பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா், புள்ளியியல் ஆணையம், ரிசா்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளாா்.

சுமன் பெரி மே 1-ஆம் தேதி முதல் நீதி ஆயோக் துணைத் தலைவராக செயல்படுவாா் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக பணியாற்றி வந்த ராஜீவ் குமாா் பணி ஓய்வு பெற்ால், அந்தப் பொறுப்பில் சுமன் பெரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT