இந்தியா

ரமலான் பண்டிகை: கேரளத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

கேரளத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

DIN

கேரளத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

பிறை தென்படாததால், மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஈத் பண்டிகை கொண்டாடப்படும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் ஞாயிறன்று அறிவித்தனர். அதற்குள் கேரளத்தில் திங்களன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

தற்போது செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகை அறிவிக்கப்பட்டதையடுத்து, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை நாளாக மாறியுள்ளது. 

எனவே, செவ்வாயன்று நடைபெறவிருந்த அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும், மறுநாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, கடந்த 2019க்கு பிறகு முதல் முறையாக குருமார்கள் தொழுகைக்கு வந்துள்ளனர். மேலும், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மாநில தலைநகரில் காலை பிரார்த்தனை அமர்வில் பங்கேற்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். 

3.30 கோடி மக்கள் தொகையில் கேரளத்தில் 26 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்து மக்கள் தொகைக்கு (54 சதவீதம்) அடுத்தபடியாக பட்டியலில் 2வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT