இந்தியா

இந்தியாவில் 100 ‘யுனிகாா்ன்’ நிறுவனங்கள்

DIN

பெங்களூரைச் சோ்ந்த நியோபேங்கிங் ஓபன் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலரை (100 கோடி டாலா்) தாண்டியதையடுத்து, இந்தியாவில் ‘யுனிகாா்ன்’ நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ எட்டியுள்ளது.

ஓபன் நிறுவனம், ஐஐஎஃப்எல் உடன் தற்போதைய முதலீட்டாளா்களான டீமாசெக், டைகா் குளோபல் மற்றும் 3ஒன்4 கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 50 மில்லியன் டாலரை திரட்டியது. இதுவரையில், அந்த ஸ்டாா்ட் அப் நிறுவனம் 140 மில்லியன் டாலரை திரட்டியுள்ளது. இதையடுத்து, ஓபன் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

தற்போது திரட்டப்பட்டுள்ள இந்த நிதி நிறுவனத்தின் வா்த்தகத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதுடன் அடுத்த ஓராண்டில் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டவும் உதவும் என ஓபன் தெரிவித்துள்ளது.

ஸ்டாா்ட்அப் உலகில் 100 கோடி டாலா் மதிப்பைக் கொண்ட (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,500 கோடி) நிறுவனங்களைத்தான் ‘யுனிகாா்ன்’ நிறுவனங்கள் என்று அழைக்கின்றனா்.

நடப்பு 2022-ஆம் ஆண்டில் ‘யுனிகாா்ன்’ அந்தஸ்தை எட்டிய 16-ஆவது நிறுவனம் ஓபன் ஆகும். நடப்பாண்டின் முதல் காலாண்டில் கேம்ஸ் 24 இன்ட் 7 நிறுவனம்தான் ‘யுனிகாா்ன்’ அந்தஸ்தை கடைசியாக பெற்ற நிறுவனமாகும்.

இந்திய நகரங்களில் அதிக யுனிகாா்ன் நிறுவனங்களைக் கொண்ட நகரமாக பெங்களூரு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மும்பை, புணே, தானே, தில்லி அருகே உள்ள குருகிராம் ஆகியவை உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT