கோப்பிலிருந்து.. 
இந்தியா

அட்சய திருதியை: கங்கையில் நீராடி மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்

மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நாளை, நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். புனித நதிகளில் நீராடி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

ANI


புது தில்லி: மிகவும் சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நாளை, நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். புனித நதிகளில் நீராடி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

வாராணசியில் உள்ள ஏராளமான பக்தர்கள் புனித கங்கையில் நீராடி, விஷ்ணுவையும் லஷ்மியையும் வழிபட்டனர். 

கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள் பலரும், இன்று இந்த கங்கையில் புனித நீராடியதை பெரும்பாக்கியமாகக் கருதுகிறோம். இன்று குடும்பத்துடன் இங்கே இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகம் கரோனா பேரிடரிலிருந்து விடுபட இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் என்றனர்.

இதுபோல, பிரயாக்ராஜ் பகுதியிலும் ஏராளமான மக்கள் கங்கையில் நீராடி சிறப்புவழிபாடுகளை நடத்தினர்.

அட்சய திருதியை நாளை முன்னிட்டு ஏராளமான தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT