இலங்கைக்கு திமுக எம்பிக்களின் 1 மாத ஊதியம் நன்கொடை
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து திமுகவின் கட்சித் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
இதையும் படிக்க.. ம.பி.யில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ‘நூா்ஜஹான்’ மாம்பழம்!
இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3-5-2022 அன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை “முதலமைச்சர் பொது நிவாரண நிதி”க்கு வழங்கிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.