ஆதார் பூனாவல்லா 
இந்தியா

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்: ஆதார் பூனாவல்லா

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொள்ளலாம் என்று

DIN

புனே: 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொள்ளலாம் என்று  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா புதன்கிழமை கூறினார்.

பெரியவர்களுக்கு கோவோவேக்ஸ் கிடைக்குமா என்ற கேள்விக்கு, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவோவேக்ஸ் கிடைக்கும் என்று பூனாவல்லா சுட்டிரையில் கூறியுள்ளார்.

கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் குழந்தைகளுக்காகக் கிடைக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஆகும். இது ஐரோப்பாவிலும் விற்கப்படுகிறது மற்றும் 90 சதவீத செயல்திறன் கொண்டது. இது நமது குழந்தைகளைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது என்று அவர் சுட்டிரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) 12-17 வயதிற்குட்பட்டோருக்கான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில், அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக அரசாங்கம் கோவோவேக்ஸை அனுமதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT