ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் உள்ள 10 காவல் நிலையங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 6 நள்ளிரவு வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜோத்பூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது. இது தொடர்பாக இதுவரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க தற்போது மே 6ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை இணையதள சேவைகள் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகர் முழுவதும் ஊரடங்கு முறையாகப் பின்பற்றப்படுவதாகவும், தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமை இயக்குனர் எம்எல் லாதர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.