முகப்பு
இந்தியா

நடிகை புகார்: இயக்குநர் சனல்குமார் சசிதரனுக்கு பிணை

கேரள முன்னணி நடிகை மஞ்சு வாரியார் தான் மிரட்டப்படுவதாக  இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது அளித்த புகாரினால் கைது செய்யப்பட்டவருக்கு  வெள்ளிக்கிழமை கேரள நீதிமன்றம்  பிணை வழங்கியது.

Updated On : 6 மே, 2022 at 4:09 PM
மஞ்சு வார்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:40 PM


கொச்சி : கேரள முன்னணி நடிகை மஞ்சு வாரியார் தான் மிரட்டப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் இயக்குநர் சனல்குமார் சசிதரன் மீது அளித்த புகாரினால் கைது செய்யப்பட்டவருக்கு   வெள்ளிக்கிழமையன்று கேரள நீதிமன்றம் பிணை வழங்கியது.

வியாழன் இரவு காவல்துறையினர் காவல்நிலைய பிணை வழங்க முன்வந்த போதும் அதை ஏற்க சனல்குமார் மறுத்ததால் வெள்ளிக்கிழமை அன்று ஆலுவா  உள்ளூர் நீதிமன்றம் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

காவல்துறை அளித்த பிணையை ஏன் மறுத்தீர்களென நீதிமன்றம் வினவியபோது, நீதிமன்றத்தில் சில விசயங்களை சொல்லவேண்டும் என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்ட நீதிமன்றம், இரண்டு பேரின் பிணைய உத்தரவாதத்துடன் பிணை வழங்கியது.

சில நாள்களாக தான் மிரட்டப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும்  அளித்த புகாரின் பேரில் வியாழன் அன்று சனல் குமார் கைது செய்யப்பட்டார்.

Advertisement

சசிதரன் தனது உறவினர்களுடன் அருகிலுள்ள தனது பூர்விக பார்சலா  கோவிலுக்கு வந்திருந்த போது மூன்று காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக விசாரணைக்கு கொண்டுசெல்லப்பட்டார் .

இதற்கிடையே அந்த இயக்குனர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சில நபர்களால் கடத்த முயற்சி நடந்ததாகவும்  முகப்புத்தகத்தின் நேரலையில் குற்றம் சாட்டினார்.

மாநில அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாததால் தனது தங்கையின் இருப்பிடத்தில் அதாவது பார்சலா எல்லையிலுள்ள தமிழ்நாட்டில் வசித்து வருவதாக கூறினார்.

உடனடியாக மஞ்சு வாரியார் அளித்த புகாரின்பேரில் சசிதரன் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

சில நாள்களுக்கு முன்னதாக சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் மஞ்சு வாரியாரின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளதாக கூறினார். மஞ்சுவின் மேலாளார் தான் அவரது ஆபத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் மஞ்சு வாரியார் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளார் என்றும் குறிப்பிட்டு கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.