30 ஆண்டுக்கு முந்தைய புகைப்படத்தைப் பகிர்ந்த முதல்வரின் மனைவி: என்ன விசேஷம்?
30 ஆண்டுக்கு முந்தைய புகைப்படத்தைப் பகிர்ந்த முதல்வரின் மனைவி: என்ன விசேஷம்?
மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானின் மனைவி, சாதனா, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்றை சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.
சிவ்ராஜ் சிங் சௌஹான் - சாதனா தம்பதியர் வியாழக்கிழமை தங்களது 30-ஆவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் சாதனா, எனது வாழ்க்கைத் துணையுடன், எப்படி 1992 முதல் 2022ஆம் ஆண்டு வரை நமது வாழ்க்கைப் பயணம் சென்றுள்ளது என்று எனக்குத் தெரியவேயில்லை என்று பதிவிட்டுள்ளார்.
இதுபோல, முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானும் தனது சுட்டுரைப் பக்கத்தில் 30வது திருமண நாளை முன்னிட்டு, நமது கலாசாரத்தில் திருமணம் என்பது மிகவும் புனிதமான சடங்கு, இரண்டு உயிர்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்காக. ஒரு குடும்பஸ்தனாக இருந்துகொண்டு, இந்த சமூகத்துக்காவும் மாநிலத்தின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து 30 ஆண்டுகள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2006ஆம் ஆண்டு தனது கணவருக்காக பிரசாரத்தில் ஈடுபட்டபோதுதான், சாதனா வெளியுலகப் பார்வைக்கு அறியப்பட்டார்.