நாட்டில் புதிதாக 3,805 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,805 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம்: இரு போலீசார் கைது
மேலும் 3,168 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 4,25,54,416 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5,24,024 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 20,303 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.