முகப்பு
இந்தியா

இந்தூர் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பட்ட தீ விபத்து, மிகுந்த வருத்தமளிக்கிறது.  துயரமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →