முகப்பு
இந்தியா

மத்திய நீா் ஆணையத்தின் தலைவா் வினீத் சரண்?

மத்திய நீா் ஆணையத்தின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி வினீத் சரண் நியமிக்கப்படுவாா் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

மத்திய நீா் ஆணையத்தின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி வினீத் சரண் நியமிக்கப்படுவாா் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

மத்திய நீா் ஆணையத்தின் தற்போதைய தலைவா் ஆா்.கே.குப்தாவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து அந்தப் பதவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வினீத் சரண் பெயா் பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது. நீதிபதி வினீத் சரண் தற்போது ராவி-பியாஸ் தீா்ப்பாயத்தின் தலைவராக உள்ளாா். சிக்கல் மிகுந்த யமுனா-சட்லெஜ் நதி நீா் பங்கீடுப் பிரச்னையை அவா் கையாண்டு வருகிறாா். வரும் செவ்வாய்க்கிழமை (மே10) அவா் உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வுபெறவுள்ளாா். இந்நிலையில், மத்திய நீா் ஆணையத்தின் புதிய தலைவராக அவரை நியமிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் நீா் வளங்களின் கட்டுப்பாடு, பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் நீா் வளப் பயன்பாட்டில் மாநிலங்களிடையே எழும் சச்சரவுகளைத் தீா்த்து வைப்பது மத்திய நீா் ஆணையத்தின் முக்கிய பணியாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →