'அசானி' புயல்: நாளை காலை 11 மணிக்கு கரையைக் கடக்கிறது
வங்கக் கடலின் மத்திய மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள அசானி புயல் நாளை (மே 11) காலை 11 மணி முதல் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் மத்திய மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள அசானி புயல் நாளை (மே 11) காலை 11 மணி முதல் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் ஆந்திரக் கடலோரப் பகுதியில் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் (கிருஷ்ணா, கிழக்கு - மேற்கு கோதாவரி) இடையே வலுவிழக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
படிக்க | அசானி புயல்: ஆந்திரத்திற்கு ‘ரெட் அலர்ட்’
Advertisement
Advertisement
புயல் காரணமாக ஆந்திர கடலோரப்பகுதிகளில் 75 - 85 கிலோமீட்டர் வேகத்திலும், ஒடிசா கடலோரப்பகுதிகளில் 45 - 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புயல் காரணமாக கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினர் ஒடிசா மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசானி புயல் காரணமாக ஆந்திரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்களும், ஒடிசாவில் 17 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.