இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டார். ராணுவ வீரர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

திங்களன்று மாலை சோபியானில் உள்ள பண்டோஷன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தால். 

பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில், பண்டோச்சனில் வசிப்பவர்களான சோயிப் யூஸப் தார் மற்றும் ஷாஹித் கனி தார் ஆகிய பொதுமக்கள் இருவர் மற்றும் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் சஞ்சு தாஸ் காயமடைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

காயமடைந்தவர்கள் அங்குள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, ஒருவர் உயிரிழந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT