இந்தியா

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா

DIN

புதுதில்லி: இந்தியாவில் புதிதாக 2,288 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை 3,207 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) 2,288 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3,044 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


இதுவரை மொத்தம் 4,25,63,949 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,103 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 19,637 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 13,90,912 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,90,50,86,706 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - வழக்கு

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT