கோப்புப்படம் 
இந்தியா

அசானி புயல்: விஜயவாடாவில் விமான சேவை ரத்து

வங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, விசாகப்பட்டினத்திற்கு செல்லும், வந்தடையும்

DIN

விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, விசாகப்பட்டினத்திற்கு செல்லும், வந்தடையும்  அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயவாடாவில் விமான சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளது

அசானி புயல் ஆந்திர பிரதேச கடற்கரையை நெருங்கி வருவதால், அப்பகுதியில் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான சேவைகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திலும் புயல் தாக்கத்தின் காரணமாக திட்டமிடப்பட்ட விஜயவாடாவிற்கு செல்லும், வந்தடையும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்துள்ளது. விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் கடப்பாவிற்கான இணைப்பு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ராஜமுந்திரி விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. விசாகப்பட்டினம், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT