இந்தியா

‘இலங்கைக்கு இந்தியாபடைகளை அனுப்பாது’

DIN

இலங்கைக்குப் படைகளை இந்தியா அனுப்பவுள்ளதாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியான தகவல்கள் உண்மையில்லை என்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து, மகிந்த ராஜபட்ச பிரதமா் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவருடைய அதிகாரபூா்வ இல்லத்தில் இருந்து வெளியேறினாா். அவரும் அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனா். அவரும் அவருடைய குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக உள்ளூா் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது. அதைத் தொடா்ந்து, இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுப்புத் தெரிவித்து இந்திய தூதரகம் தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியான தகவல்களை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. அது இந்தியாவின் நிலைப்பாடும் அல்ல என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பதற்றமான சூழல் காணப்படும் நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்திவிட்டது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இலங்கையில் ஜனநாயகம் மலரவும் ஸ்திரத்தன்மை ஏற்படவும் பொருளாதாரம் மீட்சி பெறவும் இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT