இந்தியா

இலங்கைக்கு படைகள் அனுப்பப்படாது: இந்தியா திட்டவட்டம்

DIN

புது தில்லி: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையே, அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், இலங்கைக்கு படைகள் அனுப்பப்படாது என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இலங்கையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு ராணுவத்துக்கு உதவும் வகையில் இந்தியா தனது படைகளை அனுப்பலாம் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.

இதற்கு விளக்கம் அளித்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியா, இலங்கைக்கு படைகளை அனுப்பாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மேலும்,  இலங்கையின் ஜனநாயகம், பொருளாதாரம் மீள்வதற்கான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும், அசாதாரண சூழ்நிலை நிலவும் இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது என்றும் வெளியுறவுத் துறை விளக்கத்தில் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT