அவசர சட்டம் மூலம் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை மசோதா...கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
மதமாற்ற தடை சட்ட மசோதா அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டு கர்நாடக அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்ட மசோதா அவசர சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாயத்தின் பேரிலேயோ தூண்டுதலின் பேரிலேயோ மத மாறுவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது.
முன்னதாக, இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "சட்டப்பேரவையும் சட்ட மேலவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்தின் மூலம் மசோதா கொண்டுவரப்படும்" என்றார்.