இந்தியா

இந்தூரில் பத்திரிகையாளர் தூக்கிட்டுத் தற்கொலை 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 40 வயது பத்திரிகையாளர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 40 வயது பத்திரிகையாளர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக லசுடியா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தோஷ் தூதி கூறுகையில், 

பத்திரிகையாளர் கணேஷ் திவாரி புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் தற்கொலைக்கான எந்த ஆதாரமும், பொருளும் சிக்கவில்லை. 

பல்வேறு செய்தி சேனல்களில் பணியாற்றிய திவாரி, லசுடியா காவல் நிலையத்தைச் சேர்ந்த சில பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குறித்து கடந்த 5 நாள்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில்  செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 

சாலையோர உணவக உரிமையாளரைப் பற்றி எதிர்மறையான செய்தியை வெளியிட்டதாகக் கூறி திவாரி மற்றும் நான்கு பேர் மீது லசுடியா காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மிரட்டி பணம் பறித்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவரைக் கைது செய்தனர்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஜாமீன் பெற்ற திவாரி, தனிப்பட்ட வெறுப்பு காரணமாக லாசுடியா போலீசார் தனக்கு எதிராக தவறான எஃப்ஐஆர் பதிவு செய்ததாக குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், நேற்றிரவு அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல்துறையினர் இதுதொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்தால் ஓட்டுநர் நோயாளியாவார் - இபிஎஸ் எச்சரிக்கை

ரஜினி - கமல் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

பிரேவிஸின் எழுச்சி..! டெஸ்ட், டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் அறிமுகம்!

டி.ஆர். பாலு மனைவி காலமானார்!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

SCROLL FOR NEXT