இந்தியா

ககன்யான் திட்டத்தின் பூஸ்டர் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

DIN

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்ட விண்கலத்தின் பூஸ்டர் சோதனையை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டம் ககன்யான். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் பூஸ்டர் சோதனை வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்டது.

சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட்டின் ஹெச்எஸ் 200 பூஸ்டர் சோதனை 203 டன் எரிபொருளுடன் நடத்தப்பட்டது.  இந்த சோதனையின்போது 700 அளவுகோல்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த சோதனையின் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மேலும் வளர்ச்சியடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT