முகப்பு
இந்தியா

குரைக்கிற நாய்கள் குரைக்கட்டும்: அக்பருதீன் ஓவைசி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
அக்பருதீன் ஓவைசி
பகிர்:

மகாராஷ்டிரா: குரைக்கிற நாய்கள் குரைக்கட்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைசி கூறியுள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைசி மகாராஷ்டிரா அவுரங்காபாத் மாவட்டத்தின் முகலாயர்கள் சமாதியை பார்க்க சென்று இருந்தார். 

மகாராஷ்டிரா அவுரங்காபாத்தில் பேசிய  ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அக்பருதீன் ஓவைசி," குரைக்கிற நாய்கள் குரைக்கட்டும். சிங்கங்கள் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் செல்லும். அவர்கள் வீசும் வலையில் வீழ்ந்து விடாதீர்கள். அவர்கள்  என்ன  சொன்னாலும் சிரித்து விட்டு நமது வேலையை பார்க்க வேண்டும்" என்று கூறினார். 

மகாராஷ்டிரா நவநிர்மான் சேவை அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரை தான் நாய் என குறிப்பிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.