இந்தியா

வெளிநாடு செல்வோர் 90 நாள்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: சுகாதாரத் துறை

DIN

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய அடுத்த 90 நாள்களுக்குப் பின்னர் முன்னச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி(பூஸ்டர் டோஸ்)யை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் 18 வயதைக் கடந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 9 மாதங்களுக்குப் பிறகே 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 

இதன் காரணமாக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர்களால் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவெளியைக் குறைக்க பலதரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெளிநாடு செல்வோர் 9 மாதங்களுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் கால இடைவெளி அளவு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய அடுத்த 90 நாள்களுக்குப் பின்னர்(3 மாதங்களுக்குப் பிறகு) முன்னச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT