முகப்பு
இந்தியா

இலங்கைக்கு 65,000 டன் யூரியா: அனுப்புகிறது இந்தியா

இலங்கைக்கு 65,000 டன் யூரியா உரத்தை இந்தியா அனுப்பவிருக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

இலங்கைக்கு 65,000 டன் யூரியா உரத்தை இந்தியா அனுப்பவிருக்கிறது.

இதுகுறித்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடப்பு சாகுபடி பருவத்துக்குத் தேவையான உரத்தை உடனடியாக அனுப்ப இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அதனை ஏற்று, இலங்கைக்கு 65,000 டன் யூரியாவை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உரம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இலங்கைக்கு யூரியாவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய உரத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சதுா்வேதியை இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிந்த மொரகொட தில்லியில் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, 65,000 டன் யூரியாவை இலங்கைக்குப் பெற்றுத் தர உதவியமைக்காக சதுா்வேதிக்கு அவா் நன்றி தெரிவித்தாா் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →