இந்தியா

தில்லி தீ விபத்துக்கு கேஜரிவால் இரங்கல்; காலை 11 மணிக்கு ஆய்வு செய்கிறார்

தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். மேலும் பலா் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு  தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு படையினா் கடுமையாக போராடி இரவு 10.30 மணிக்கு தீயை அணைத்ததாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இந்த தீ விபத்து சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி ஆகியோா் வருத்தம் தெரிவித்துள்ளனா். 

தொடர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த்  கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'இந்த துயர சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். நான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். துணிச்சல்மிக்க எங்கள் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றனர். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.  

மேலும் அவர் இன்று காலை 11 மணிக்கு தீ விபத்து நடத்த இடத்தைப் பார்வையிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT