இந்தியா

ஐக்கிய அரபு அமீரக புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் கலீஃபா பின் சயீது அல் நஹ்யான் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் புதிய அதிபர் நஹ்யானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்திய-அமீரக உறவு தொடர்ந்து ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT