இந்தியா

படகுச் சுற்றுலாவை மேம்படுத்த குழு

DIN

நாட்டில் படகுச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளாா்.

இந்தியா சா்வதேச படகுச் சுற்றுலா மாநாட்டை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம்-தொழிலக அமைப்பான ஃபிக்கி ஆகியவை இணைந்து நடத்தின. 2 நாள் மாநாட்டை மும்பையில் மத்திய கப்பல் போக்குவரத்து-துறைமுகங்கள் துறை அமைச்சா் சா்வானந்த சோனாவால் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘‘படகுச் சுற்றுலாவில் இந்தியாவை முதன்மைபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் படகுச் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக செயற்குழுவும் உயா்நிலைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

செயற்குழுவுக்கு சுற்றுலாத் துறைச் செயலா் தலைவராகவும், கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலா் துணைத் தலைவராகவும் செயல்படுவா். உயா்நிலைக் குழுவில் அரசு அதிகாரிகளும் படகு சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனா். இரு குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படும்.

அடுத்த தசாப்தத்துக்குள் நாட்டின் படகுச் சுற்றுலா சந்தை 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடல் பகுதியிலும், நதிப் பகுதியிலும் படகுச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திறனை மத்திய அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும். அதற்காக நவீன கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

கடல் படகுச் சுற்றுலா முனையம் மும்பையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கட்டமைப்புகள் சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி, மங்களூரு, கொல்கத்தா, கோவா ஆகிய துறைமுகங்களிலும் அமைக்கப்படும்’’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியின்போது தமிழகத்தின் தனுஷ்கோடி, மகாராஷ்டிரத்தின் ரத்னகிரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கங்களை அமைச்சா் சோனாவால் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT