இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்?

DIN

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். 

மாநிலங்களவை உறுப்பினராக, அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் கர்நாடகத்தில் 5 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து அதில் ஒரு இடத்திற்கு நிர்மலா சீதாராமனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற மாநில பாஜக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் மாநிலங்களை உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 

முன்னதாக, நிர்மலா சீதாராமன் 2014 - 16ல் ஆந்திரத்தில் இருந்தும் அதன்பின்னர் 2016 முதல் கர்நாடகத்திலும் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மேலும் 2014-17ல் மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2017-19 மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த அவர், 2019 முதல் மத்திய நிதியமைச்சராக இருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT