முகப்பு
இந்தியா

திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் பலி, 15 பேர் பாதிப்பு: ம.பி.யில் பரிதாபம்

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் உயிரிழந்தனர். 15 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 17 மே, 2022 at 1:21 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:47 PM


மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் உயிரிழந்தனர். 15 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோடியா கிராமத்தில் உள்ள சிலர், திங்கள்கிழமை இரவு திருமண விழாவில் உணவு சாப்பிட்டதைத் தொடர்ந்து, வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. 

Advertisement

உடனே அவர்கள் பாண்டுர்னா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 2 சிறுமிகள் உயிரிழந்தனர் என்று மருத்துவர் வினீத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

பாலக் (8), அக்ஷரா (11)  ஆகிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மேலும் நோய்வாய்ப்பட்ட 15 பேரில் இருவரின் நிலை மோசமாக உள்ளது. 

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

உணவில் விஷம் கலந்துள்ளதா என்பது குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.