இந்தியா

ம.பி.யில் நடந்து சென்றவர் மீது லாரி மோதல்: 3 பேர் பலி, 10 பேர் காயம்

DIN

மத்தியப் பிரதேசத்தில் கந்த்வா மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி சில வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். 

மாவட்டத் தலைமையகத்திலிருந்து கிட்டத்தட்ட 35 கி.மீ தொலைவில் உள்ள முண்டி-பீட் சாலையில் திங்கள் இரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

ஆசிரமத்திற்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் திருமண நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி சில இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதாக காவல்துறை அதிகாரி ஆர்.பி.யாதவ் கூறினார். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், 

இருசக்கர வாகனத்தில் சென்ற ஜென்டாலால் ரத்தோர்(62), அவரது மருமகள் விஷால் ரத்தோர் மற்றும் சிறுமி குஷி (5) ஆகிய மூவர் மீது வேகமாக வந்த லாரி மோதியுள்ளது. 

ஜென்டலால் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்ற இருவரும் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். 

சாலையில் நடந்து சென்றவர்கள் உள்பட மேலும் 10 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT