இந்தியா

12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்துங்கள்: உ.பி. முதல்வர்

DIN

உத்தரப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துங்கள் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

மாநிலத்தில் கரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்த முதல்வர், தகுதியான அனைத்து சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

12-14 வயதுக்குட்பட்ட பல சிறார்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். மாநிலத்தில் தடுப்பூசிகள் சரியான அளவில் கிடைப்பதுடன், எதிர்காலத் தேவைகளுக்காகவும் இருப்பு உள்ளது என்று உறுதி செய்ய வேண்டும். 

பூஸ்டர் டோஸின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கவும். 

உத்தரப் பிரதேசம் இதுவரை 32,10,86,485 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதில் 17,30,37,190 பேர் முதல் தவணையும்,  14,50,83,297 பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை, மாநிலத்தில் 15-17 வயது பிரிவில், 96 சதவீதத்திற்கும் அதிகமான சிறார்கள் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இந்த வயது பிரிவில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

கடந்த ஜனவரி 10 முதல் முன்னணி, சுகாதாரப் பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கத் தொடங்கியது. மாநிலத்தில் இதுவரை 30 லட்சம் முன்னெச்சரிக்கை டோஸ் வழங்கப்பட்டுள்ளன. 90.53 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையான தடுப்பூசியும், 100 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 

தற்போது, ​​மாநிலத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உள்ளது. இது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் பயன்படுத்துவதை முதல்வர் கட்டாயமாக்கியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT