கோப்புப்படம் 
இந்தியா

கேரளத்தில் தொடர் மழை: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளத்தில் தொடர் மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு எச்சரிக்கை(ஆரஞ்சு அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் தொடர் மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு எச்சரிக்கை(ஆரஞ்சு அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், புதன்கிழமை கேரளத்தில் 7  மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு எச்சரிக்கையானது இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இன்று திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை(வியாழக்கிழமை) கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது. 

அடுத்த 2 நாள்களுக்கு மாநிலத்தின் சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்புப் படை 5 குழுக்களை கேரளாவிற்கு அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT