இந்தியா

சீரடி சாய்பாபா கோயிலுக்கு ரூ.2 கோடி தங்கப்பட்டை நன்கொடை

மகாராஷ்டிரத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தால் ஆன பட்டையை நன்கொடையாக அளித்துள்ளார். 

DIN

மகாராஷ்டிரத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான சீரடி சாய்பாபா கோயிலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தால் ஆன பட்டையை நன்கொடையாக அளித்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து கோயில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பாக்கியஸ்ரீ பனாயத் கூறுகையில், 

பாபாவின் பக்தரான பார்த்தசாரதி ரெட்டி கடந்த 2016-ம் ஆண்டில் சாய்பாபா சிலையின் சிம்மாசனத்திற்கான தங்கப் பட்டையை நன்கொடையாக வழங்க விரும்பினார். ஆனால் கரோனா தொற்று காரணமாக தாமதமானது. 

அவர், இப்போது ரூ.2 கோடி மதிப்புள்ள நான்கு கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட தங்கப் பட்டையை ஸ்ரீ சாய்பாபாவின் சிம்மாசனத்திற்காக நன்கொடையாக அளித்துள்ளார். 

கடந்த 2007ஆம் ஆண்டில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு பக்தர் 94 கிலோ தங்க சிம்மாசனத்தை கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT