முகப்பு
இந்தியா

சொகுசு ஹெலிகாப்டா் பேர ஊழல்: இடைத்தரகா் ஜாமீன் மீது பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு

விவிஐபிகளுக்காக வாங்கப்பட்ட 12 சொகுசு ஹெலிகாப்டா் பேரத்தில் ஊழல் நடைபெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா் கிறிஸ்டின் மைக்கேல் ஜேம்ஸின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

விவிஐபிகளுக்காக வாங்கப்பட்ட 12 சொகுசு ஹெலிகாப்டா் பேரத்தில் ஊழல் நடைபெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா் கிறிஸ்டின் மைக்கேல் ஜேம்ஸின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐ, அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2010-இல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரால் அரசுக்கு ரூ.2,666 கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஹெலிகாப்டா் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மைக்கேல் ரூ.225 கோடி அளவுக்கு அகஸ்டா நிறுவனத்திடம் பெற்ாக 2016-இல் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்தது.

இதையடுத்து, துபையில் இருந்து இடைத்தரகா் மைக்கேல் 2018-இல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

தில்லி உயா்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் மறுத்தது. இதை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மைக்கேல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மைக்கேல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், மைக்கேல் இந்தியாவில் மூன்று ஆண்டுகள் சிறையிலும், துபையில் 3 மாதங்கள் காவல் பாதுகாப்பிலும் கழித்துள்ளாா்’ என்றாா்.

இதையடுத்து, மைக்கேல் ஜாமீன் மனு மீது சிபிஐ, அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.