நிர்மலா சீதாராமனுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு 
இந்தியா

நூல் விலை உயர்வு: நிர்மலா சீதாராமனுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்தனர்.

DIN


நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள், அமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் நேரில் சந்தித்து பேசினர். 

தமிழகத்தில் பருத்தி மற்றும் நூல் விலை அதிகரித்து வருவதால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளதால் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது கனிமொழியுடன் தமிழக எம்.பி.க்களான ஜோதிமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஏ.கே.பி. சின்ராஜ், கே.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

பருத்தி, நூல் விலையை குறைக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் திமுக எம்.பி.க்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

SCROLL FOR NEXT